தலையில் அடிப்பட்ட டெல்லி வீரர் லுங்கி இங்கிடி-க்கு Concussion ; அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார்..?
Delhi player Lungi Ngidi suffers concussion after blow to the head
கடந்த 25 -ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இன்கிடி பீல்டிங் செய்யும் போது தடுமாறி விழுந்து தலையில் காயம் அடைந்து டெல்லி தனியார் மருத்துவமனைக்கு கொடு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவர் குணம் அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். களத்தில் எதிர்பாராத விதமாக விழுந்ததால் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டதால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு அன்றிரவே அவர் வீடு திரும்பினாலும், அவருக்கு தலை அதிர்ச்சி (Concussion) ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக, ஐசிசி (ICC) விதிமுறைப்படி, தலை அதிர்ச்சி ஏற்பட்ட வீரர் கட்டாயம் ஏழு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் அவர் அடுத்த சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி அணியின் வேகப்பந்து ஏற்கனவே பின்னடைவை சந்தித்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டாலும், அவர் மே 1-ஆம் தேதிக்கு பிறகுதான் விளையாட அனுமதிக்கப்படுவார். தற்போது என்கிடியும் இல்லாதது அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Delhi player Lungi Ngidi suffers concussion after blow to the head