வைபவ் சூரியவன்ஷியின் பேட்டில் AI சிப்..Lab-இல் கொடுத்து டெஸ்ட் செய்ய வேண்டும்; பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் காண்டு..!
Vaibhav Suryavanshis bat must be submitted to a lab for testing Pakistani cricket expert fumes
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 பந்துகளில் அரைசதம் அடித்த இளம் வீரர் மற்றும் 15 வயதில் 1000 ரன்களை கடந்தவர் என்ற புதிய படைத்துள்ளவர் வைபவ் சூர்யவன்ஷி. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் கலக்கிய நிலையில், ஐபிஎல் போட்டிகளில் பலரையும் வியக்க வைக்கும் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார்.
கடந்த ஐபிஎல் தொடரிலும், நடப்பு தொடரில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 பந்துகளில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனை படைத்தார்.
கடந்த ஆண்டு குஜராத் டைட்டான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி சார்பில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காட்டினார். தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 36 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். இந்நிலையில் 40 பந்துகளுக்கு உள்ளாகவே 02 முறை சதம் விளாசிய உலகின் இளம் கிரிக்கெட் வீரர் என்ற சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.

ஏற்கனவே 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ஐபிஎல் தொடரிலும் ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட், கம்மின்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் எதிர்கொண்டு பறக்கவிடுகிறார்.
இவரின் அபாரமான ஃபார்ம் காரணமாக, வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மட்டும் சாத்தியமானால் இந்தியாவிற்காக மிகக் குறைந்த வயதில் அறிமுகமாகும் வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.
இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி குறித்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் டாக்டர் நௌமன் நியாஸ் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, ''அந்த சின்ன பையன் வைபவ் சூர்யவன்ஷி அடிக்கிற அடி.. இது சாதாரண மனிதன் அடிக்கிற அடி மாதிரி தெரியவில்லை. அது நம்ப முடியவில்லை.
சூர்யவன்ஷியின் பேட்டில் AI சிப் இருக்கும் என சந்தேகமாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்துவது போல, சூர்யவன்ஷியின் பேட்டை லேப் சென்டரில் கொடுத்து சோதனை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது பரபரப்பாகியுள்ளது.
English Summary
Vaibhav Suryavanshis bat must be submitted to a lab for testing Pakistani cricket expert fumes