'ஜனநாயகன்' படத்தில் இழுவுபடுத்தியதாக குற்றச்சாட்டு; நடிகர் விஜய், ஹெச்.வினோத் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் கிராமத்தினர் போரட்டம்..! - Seithipunal
Seithipunal


'ஜனநாயகன்' திரைப்படத்தில், தங்கள் ஊரின் பெயரை இழிவுபடுத்தியதாகக் கூறி உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் 'ஜனநாயகன்'. பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 09-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் படத்தின் வெளியீடு தாமதமானது.

ஒரு புறம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து விஜய் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதே நேரம், ஜனநாயகன் படமும், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஜனநாயகன்' திரைப்படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சட்டியுள்ளதோடு, இதனை கண்டித்து பாப்பாபட்டி, பகாதேவன்பட்டி மற்றும் பேயம்பட்டி ஆகிய மூன்று கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், படத்தின் இயக்குநர் வினோத் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பாப்பாபட்டியை பொதுத் தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். இந்த சம்பவம் விஜய் தரப்பினருக்கு மற்றுமொரு தலைவலியாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villagers stage a protest demanding an apology from actor Vijay and H Vinoth dubbing Vijay a Jannayagan


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->