'இளைஞர்கள் தவறாக வழி காட்டப்படுகின்றனர்'; NDA-வின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கவலை..! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயகக் கூட்டணியின், நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்படுவதாகக் கவலை தெரிவித்ததோடு,"மாணவர்களைத் தூண்டிவிட வேண்டாம், அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டுங்கள்" என்று கூட்டணி எம்பிக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நீட் UG 2026 தேர்வுத்தாள் கசிவு, தகுதி தேர்வில் குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில்  கரப்பாண்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இவர்களுடன் மாணவர்களும் சேர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;

இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்படுவதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட வேண்டாம் என்றும், அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டுங்கள் என்று கூட்டணி எம்பிக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், தவறான பாதைக்குச் செல்வது எளிது, ஆனால், அவர்களை மீண்டும் சரியான பாதைக்கு அழைத்து வருவதே நமது பொறுப்பு என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளதாவது;

நீட் தேர்வு கசிவு தொடர்பான தகவல்கள் வெளியான உடனேயே, அதற்குப் பொறுப்பானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டதாகவும், அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலனுக்காக நாடாளுமன்றம் சீராக இயங்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi expresses concern at NDA parliamentary committee meeting over youth being misguided


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->