பிரதமர் இல்லம் முன் தர்ணா; ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது..!
Opposition leaders including Rahul Gandhi arrested for protesting in front of Prime Minister's residence
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களை கொண்டு மத்திய கல்வி அமைச்சர் பதவி விளக்க வேண்டும் என வலியுறுத்தி, சிஜேபி போராட்டக்காரர்கள் பாராளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையின் தடுப்புகளை மீறி அவர்கள் போராட்டம் செய்ததால் அவர்கள் மீது காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டத்தில் இரண்டு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.
இதனை கண்டித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின் போது, மாணவர்கள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கைகளில் கைவிலங்குகளை அணிந்து அடையாள எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அனைவரையும் டெல்லி காவல்துறை கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அப்புறப்படுத்தியுள்ளது. அப்போது ஆவேசமாகப் பேசிய ராகுல் காந்தி, "மோடி அரசு தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தினாலும் மாணவர்களுக்கான இந்த போராட்டம் நிற்காது; அரசு கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, காயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கியதற்குப் பொறுப்பேற்று பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Opposition leaders including Rahul Gandhi arrested for protesting in front of Prime Minister's residence