'பேரணியாக வந்த போராட்ட கும்பல் நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்துவார்களோ என்று பயந்தோம்'; கங்கனா ரணாவத்..! - Seithipunal
Seithipunal


நேற்று சிஜேபி நடத்திய 'சலோ சன்சாத்' பேரணியின் போது, நாடாளுமன்றத்துக்குள் இருந்த எம்பிக்கள் அனைவரும் பேரணியாக வந்த கும்பல் தங்கள் மீது தாக்குதல் நடத்திவிடுவார்களோ என்று அச்சமடைந்ததாக நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று 20-ஆம் தேதி தொடங்கியது.  நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தகுதி தேர்வில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுத்த டெல்லி காவல்துறையினரை கங்கனா ரணாவத் பாராட்டியுள்ளார். அத்துடன், "நாங்கள் அனைவரும் மக்களவைக்குள் இருந்தோம். இந்த கும்பல் எங்களைத் தாக்கிவிடுமோ என்று நாங்கள் மிகவும் பயந்தோம். அசம்பாவிதங்கள் நடக்காமல் கேடயமாகச் செயல்பட்டு எங்களைப் பாதுகாத்த டெல்லி காவல்துறையினரைப் பாராட்டுகிறேன்" என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்துப் பேசிய கங்கனா, இளைஞர்கள் சார்ந்த பிரச்சினைகளில் எம்பிக்கள் நேரடியாகக் கவனம் செலுத்தி, அவர்களின் சந்தேகங்களுக்கு நேர்மறையாகப் பதிலளிக்க வேண்டும் எனப் பிரதமர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அறிவியல் துறை சாதனைகள் மற்றும் ஹைட்ரஜன் ரயில் திட்டம் போன்றவை குறித்து விரிவாகப் பேச வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

முன்னதாக, போராட்டக்காரர்கள் அரசை நிர்பந்தித்து அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைக்க முடியாது என்று தெரிவித்திருந்த கங்கனா, விவாதங்களை நாடாளுமன்றத்துக்குள்ளேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kangana Ranaut said she was afraid that the protestors who had come in a rally would attack Parliament


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->