சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி; டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு..!
Delhi High Court orders to allow Sonam Wangchuk to be shifted to private hospital
டெல்லி ஜந்தர் மந்தரில் 21 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமான நிலையிலும், அவரது போட்றரத்தை கைவிட மறுத்த நிலையில், அவரை டெல்லி போலீசார் 02 நாட்களுக்கு முன்னர் (கடந்த 18-ம் தேதி) அதிகாலை மத்திய அரசின் சப்தர்ஜங் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனாலும் அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர், ''தனது கணவரின் உடல்நிலை குறித்து முரண்பட்ட அறிக்கை வெளியிடகிறது'' என குற்றம்சாட்டி இருந்தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், கீதாஞ்சலி மேல்முறையீடு செய்தார்.

குறித்த மனுவை தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் ஆட்சேபணை இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ''சோனம் வாங்சுக்கை மேல் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். இது அவருடைய அடிப்படை உரிமையை பாதுகாக்கும். மேலும், சிகிச்சையின்போது அவரது ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க தகுதியான மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்
அவருக்கு சிகிச்சை தொடர்ச்சியாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சப்தர்ஜங் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து மருத்துவப் பதிவுகள், சிகிச்சை விவரங்கள், பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை மெதாந்தா மருத்துவமனை மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்''என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''என் கணவர் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 28-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, கடந்த 18-ம் தேதி மத்திய அரசின் சப்தர்ஜங் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டார்.
English Summary
Delhi High Court orders to allow Sonam Wangchuk to be shifted to private hospital