காங்கிரஸ்,விசிகவினரை கிட்ட சேர்க்காத தவெகவினர்!கீழ்மட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் உரசல்!இடைத்தேர்தல் களநிலவரம் விஜய்க்கு அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்ததில் முதல்வர் விஜய் மகிழ்ச்சியில் இருந்தாலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக கிடைத்துள்ள களநிலவர அறிக்கைகள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு இரு தொகுதிகளின் தேர்தல் நிலவரம் குறித்து விஜய்க்கு சில முக்கிய தகவல்கள் அளிக்கப்பட்டதாகவும், அதில் கூட்டணி கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே எதிர்பார்த்த அளவுக்கு ஒருங்கிணைப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவை தற்போது கூட்டணியின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வருகின்றன. இதனால் கூட்டணி பலத்துடன் இடைத்தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தவெக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொகுதி அளவில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே முழுமையான இணக்கம் ஏற்படவில்லை என தேர்தல் கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு தேர்தல் செலவினங்களுக்கான போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தேர்தல் பணிகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்து கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் தவெக வேட்பாளர்களிடம் முறையிட்டதாகவும், அதற்கு தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் பேசுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டபோது, கூட்டணி கட்சிகளில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடம் பேசி தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பதில் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் காங்கிரஸ் மற்றும் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், கீழ்மட்டத்தில் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களே விஜய்க்கு கவலையை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மறுபுறம், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவுக்கும் களத்தில் எதிர்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதையடுத்து ஏற்பட்ட இடைத்தேர்தலில் அவரையே மீண்டும் வேட்பாளராக தவெக களமிறக்கியுள்ளது.

ஆனால், பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தை முன்வைத்து சத்யபாமாவிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில், தாங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த நிலையில் பதவியை ராஜினாமா செய்து கட்சி மாறியது ஏன் என வாக்காளர்கள் கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் அவருக்கு எதிரான கோஷங்களும் எதிர்ப்புகளும் இருப்பதாக தவெக மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழலில், கூட்டணி கட்சிகளுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருடனும், விசிக தலைவர் திருமாவளவனுடனும் பேசி கூட்டணி கட்சிகளின் ஆதரவை தேர்தல் களத்தில் முழுமையாக ஒருங்கிணைக்குமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் ஒருங்கிணைப்பு, வேட்பாளர்களுக்கு எதிராக எழும் உள்ளூர் எதிர்ப்பு உள்ளிட்டவை தவெகவுக்கு முக்கிய சவால்களாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK cadres keep Congress and VCK members at a distance byelection ground reality comes as a shock to Vijay


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->