பாஜகவை விமர்சிக்க விஜய் ஏன் தயக்கம்? “அமித்ஷா, பிரதமர் குறித்து ஒரு வார்த்தைகூட பேசுவதில்லையே!” – அரசியல் விமர்சகர் கேள்வி - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜக மற்றும் மத்திய பாஜக தலைமை குறித்து பேசும்போது மட்டும் அமைதியாக இருப்பதாக அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை விமர்சிக்கும் விவகாரத்தில் விஜய் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கோடீஸ்வரன் பேசுகையில், ஆளுநருடன் விஜய் நட்பு பாராட்டுவது, அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பது, பிரதமர் மோடியை மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க அழைத்தது போன்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, பாஜக தவெக அரசை கவிழ்க்கும் வகையில் செயல்படுவதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாஜக என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதுகூட விஜய் மிகவும் கவனமாக பேசுவதாகவும், ஆனால் தனது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசப்பட்டதாகக் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாகவும் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட சில பாஜக நிர்வாகிகள் தொடர்பாக தவெக தரப்பில் கடுமையான எதிர்வினை இல்லாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு பெண்ணை யாராக இருந்தாலும் அவதூறாகப் பேசக்கூடாது என்றும், ஆனால் முதலமைச்சரிடம் காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்கள் இருக்கும் நிலையில், பொதுக்கூட்டங்களில் இதுகுறித்து புகார் தெரிவிப்பதைவிட சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக மற்றும் அதிமுக தலைவர்களை விமர்சிப்பதில் தவெக தரப்பு தீவிரமாக இருப்பதாகவும், ஆனால் பாஜக தலைவர்கள் தொடர்பான சர்ச்சைகளில் அதே அளவிலான எதிர்வினை காணப்படவில்லை என்றும் கோடீஸ்வரன் கூறியுள்ளார். இதனால், பாஜக குறித்து விஜய் ஏன் தயக்கம் காட்டுகிறார் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் கூட்டணி மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றுக்கு தவெக தரப்பிலிருந்து போதுமான விளக்கங்கள் வெளியாகவில்லை என்றும் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இடைத்தேர்தலில் தவெக தோல்வியடைந்தால் அக்கட்சி உருவாக்கியுள்ள அரசியல் பிம்பம் பாதிக்கப்படலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதைவிட, ஆட்சியில் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே தற்போதைய இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் விஜய் திமுகவை மட்டுமே அதிகமாக விமர்சிப்பதாகவும், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து குறிப்பிடுவதைத் தவிர்ப்பதாகவும் கோடீஸ்வரன் கூறியுள்ளார். குறிப்பாக தாராபுரம் போன்ற தொகுதிகளில் அதிமுகவின் நிலைப்பாடு மற்றும் தேர்தல் முடிவுகள் தவெகவின் அரசியல் கணக்கில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why is Vijay hesitant to criticize the BJP He doesnot utter a single word about Amit Shah or the Prime Minister Political commentator asks


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->