அக்டோபர் 10-ல் சென்னை வரும் ராகுல் காந்தி.. விஜய்யை சந்திப்பாரா? ஸ்டாலினுடன் சந்திப்பா? தமிழக அரசியலில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 10-ஆம் தேதி சென்னை வருகிறார். ராகுல் காந்தியின் இந்த சென்னை பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடனான அவரது சமீபத்திய அரசியல் அணுகுமுறை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஜய்யுடன் ராகுல் காந்தி முன்பு நெருக்கமான நட்பில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான இடைவெளி அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தவெக அரசு தொடர்பாக முன்பு அடிக்கடி விசாரித்து வந்த ராகுல் காந்தி, தற்போது அந்த விசாரிப்புகளையும் குறைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, விஜய் பாஜகவுடன் மறைமுகமான அரசியல் தொடர்பை வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளதாகவும், பாஜக தரப்பின் ஆலோசனை காரணமாகவே விஜய் இந்தியா கூட்டணியில் இணையாமல் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு கருத்து நிலவுவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து ராகுல் காந்தி அல்லது விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தவெக தரப்பில் தேர்தல் ஆணையர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. SIR முறையை கொள்கை ரீதியாக எதிர்ப்பதாகவும், அதே நேரத்தில் தனிநபர் ஒருவரை குறிவைத்து தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் அரசியலை ஆதரிக்க முடியாது என்றும் தவெக அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்களில் விஜய் நேரடியாக கடுமையான விமர்சனங்களை முன்வைக்காமல் இருப்பதும் காங்கிரஸ் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் குறித்து ராகுல் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழலில் அக்டோபர் 10-ஆம் தேதி சென்னை வரும் ராகுல் காந்தியும், விஜய்யும் சந்திக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியை சந்திப்பதில் விஜய் தரப்பில் எந்த மறுப்பும் இல்லை என்றும், ஆனால் ராகுல் காந்தி தரப்பிலிருந்து இதுவரை இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இரு தலைவர்களும் சந்தித்தால், விஜய்யின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நிலவி வரும் பல்வேறு கேள்விகளுக்கு அது புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ராகுல் காந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக கனிமொழி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் தற்போது கவனம் திரும்பியுள்ளது.

இதனால் அக்டோபர் 10-ஆம் தேதி ராகுல் காந்தியின் சென்னை வருகையின்போது அவர் யாரை சந்திக்கிறார், விஜய்யுடன் நேரில் சந்திப்பு நடைபெறுமா, ஸ்டாலினை சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்துவாரா என்பவை தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியைத் தாண்டி, ராகுல் காந்தியின் சென்னை பயணம் தமிழக அரசியலில் பல்வேறு புதிய விவாதங்களுக்கு வழிவகுக்குமா என்பதும் கவனிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi to visit Chennai on October 10 Will he meet Vijay Will he meet Stalin A buzz in Tamil Nadu politics


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->