இந்தியா விளையாட்டு மைதானமா..? எக்ஸ் தளத்தின் மனுவை நிராகரித்துள்ள உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று, கர்நாடகா உயர்நீதிமன்றம் எக்ஸ் சமூக வலைதளத்தின் மனுவை நிராகரித்துள்ளது. அத்துடன், சுதந்திரமான பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

எக்ஸ் நிறுவனம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(பி) மற்றும் சயோஹ்போர்ட்டல் மூலம் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் உள்ளடக்க நீக்குதல் ஆணைகளை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

குறித்த வழக்கில், மத்திய அரசு அதிகாரிகள் தங்களின் விருப்பப்படி செயல்பட்டு, உள்ளடக்கத்தை நீக்குவதற்கான ஆணைகளை வெளியிடுவதாக எக்ஸ் சமூகவலைதளம் குற்றம் சாட்டியது. இதை எதிர்த்து, எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள், பேச்சு சுதந்திரத்தை கோர முடியாது என்று, மத்திய அரசு  அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.


இந்த வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

எக்ஸ் நிறுவனம் நாட்டின் சட்டங்களுக்கு இணங்க வேண்டும், பிரிவு 19-இன் கீழ் சுதந்திரமான பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல, இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது காலத்தின் தேவை என்றும், மேற்பார்வை இல்லாமல் மைக்ரோபிளாகிங் தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் கட்டுப்பாடில்லாமல் செயல்பட அனுமதிக்க முடியாது எனவும், கட்டுப்பாடற்ற பேச்சு சட்டவிரோதத்திற்கு வழிவகுக்கும் என்றும்,  சட்டங்களை புறக்கணித்து இந்தியாவை ஒரு விளையாட்டு மைதானமாக கருத முடியாது என கூறி, எக்ஸ் தளத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka High Court rejects X social media platform's plea to follow Indian laws


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->