எத்தனை நாள் ஆனாலும் கேட்டுபோகாத சின்ன வெங்காயம் ஊறுகாய்.!!
onion pickle recepie
தேவையான பொருட்கள்:-
சின்ன வெங்காயம், மிளகாய் தூள், நல்லெண்ணெய், கடுகு பொடி, வெந்தயப் பொடி, புளி, உப்பு, பெருங்காயத்தூள்.
செய்முறை:-
சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து உலர விடவும். பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கடுகு பொடி, வெந்தயப் பொடி, புளி கரைசலை சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் சின்ன வெங்காயம் ஊறுகாய் தயார்.