டல்லாஸில் பயங்கரம்: குடியேற்ற அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 03 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்த போது, மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆனால், துப்பாக்கி சூடு நடத்திவர் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை தற்போது, நடந்து வருகிறது. சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இதுபோல கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி, இண்டியானா போலீசில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு, ஐந்து பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 dead in shooting at Customs Enforcement office in Dallas


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->