வேலைப்பளு அதிகமா? இது சாதாரண வலி’ அல்ல... Tendon கிழிவுக்கு வழிவகுக்கும் Tendinitis அபாயம்...!
Is your workload heavy This not just ordinary pain It risk Tendinitis which lead tendon rupture
Tendinitis என்றால் என்ன?
Tendinitis (டெண்டினைட்டிஸ்) என்பது தசை மற்றும் எலும்பை இணைக்கும் “Tendon” எனப்படும் நரம்புத் தண்டில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கம் ஆகும். நமது உடலில் ஒவ்வொரு அசைவுக்கும் இந்த tendons முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் கை உயர்த்துதல், நடப்பது, ஓடுவது, எடை தூக்குவது போன்ற அன்றாட செயல்களைச் செய்யும்போது tendons அதிகமாக வேலை செய்கின்றன. இந்தப் பகுதிக்கு அதிக அழுத்தம் அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் ஏற்பட்டால், அது பாதிக்கப்பட்டு வலி மற்றும் வீக்கம் உருவாகிறது. இதுவே Tendinitis.

Tendon எப்படி செயல்படுகிறது?
Tendon என்பது ரப்பர் பேண்ட் போல தசையின் சக்தியை எலும்புக்கு கொண்டு சென்று இயக்கத்தை உருவாக்குகிறது. ஒரு சிறிய இழுப்பே கூட இந்த தண்டுகளை பாதிக்க முடியும். தொடர்ந்து வேலை செய்யும்போது tendon சோர்ந்து, சிறு கிழிவுகள் உருவாகி, பின்னர் அழற்சியாக மாறுகிறது. இதனால் அசைவுகள் வலியுடன் இருக்கும். இதை கவனிக்காமல் விட்டால் tendon பலவீனமாகி கிழியும் அபாயமும் உள்ளது.
Tendinitis ஏற்படும் காரணங்கள்
Tendinitis பெரும்பாலும் ஒரே மாதிரியான வேலைகளை மீண்டும் மீண்டும் செய்வதால் ஏற்படுகிறது. உதாரணமாக கணினியில் நீண்ட நேரம் mouse பயன்படுத்துவது, காய்கறி வெட்டுதல், திடீரென கடுமையான உடற்பயிற்சி செய்தல், அல்லது விளையாட்டு பயிற்சியில் ஓவராக ஈடுபடுதல் ஆகியவை காரணமாகலாம். வயது அதிகரிக்கும் போது tendons இலகுவாக சேதமடையும். நீரிழிவு, ஆர்த்ரைட்டிஸ் போன்ற நோய்களும் இந்த பிரச்சனையை அதிகரிக்கச் செய்கின்றன.
அறிகுறிகள் எப்படி தெரியும்?
இந்த நோய் ஆரம்பத்தில் மெதுவான வலியுடன் தொடங்குகிறது. வேலை செய்யும்போது அல்லது மூட்டை அசைக்கும் போது வலி அதிகரிக்கும். சிலருக்கு வீக்கம், சிவப்பு, சூடு போன்றவை இருக்கும். காலையில் எழுந்தவுடன் மூட்டுகள் இறுக்கமாக இருக்கும். பொருட்களை பிடிக்க முடியாமல் பலவீனம் ஏற்படும். வலி ஓய்வில் குறைந்து, வேலை செய்தால் அதிகரிப்பது Tendinitis-ன் முக்கிய அறிகுறியாகும்.
உடலில் அதிகம் பாதிக்கும் பகுதிகள்
Tendinitis தோள், முழங்கை, முழங்கால், குதிகால், மணிக்கட்டு போன்ற மூட்டுகளில் அதிகம் காணப்படுகிறது. கிரிக்கெட் அல்லது டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு “Tennis elbow”, ஓட்டப்பந்தய வீரர்களுக்கு “Achilles tendinitis”, ஜிம் பயிற்சி செய்பவர்களுக்கு தோள்பட்டை tendinitis போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஏற்படுகின்றன. இது யாரையும் வயது பாராமல் தாக்கக்கூடியது.
நோயறிதல் முறைகள்
மருத்துவர் முதலில் உடல் பரிசோதனை செய்து வலி இருக்கும் பகுதியை ஆய்வு செய்வார். தேவையானால் X-ray, Ultrasound அல்லது MRI scan மூலம் tendon-ல் அழற்சி அல்லது கிழிவு உள்ளதா என்பதை கண்டறிவார். சரியான பரிசோதனை மூலம் தான் சரியான சிகிச்சை அளிக்க முடியும்.
சிகிச்சை முறைகள்
Tendinitis ஆரம்ப நிலையில் இருந்தால் ஓய்வு மிக முக்கியம். பாதிக்கப்பட்ட பகுதியில் ice pack வைத்து குளிர்ச்சி கொடுத்தால் வீக்கம் குறையும். வலி குறைக்கும் மருந்துகள், physiotherapy, stretching பயிற்சிகள் ஆகியவை உதவும். கடுமையான நிலையில் steroid injections அல்லது PRP therapy கொடுக்கப்படலாம். tendon கிழிந்திருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால் விரைவில் குணமாக முடியும்.
தடுப்பு வழிகள்
Tendinitis வராமல் தடுக்க உடற்பயிற்சிக்கு முன் warm-up செய்வது அவசியம். ஒரே மூட்டுக்கு அதிக அழுத்தம் தராமல் இடைவெளி எடுத்து ஓய்வு கொடுக்க வேண்டும். சரியான posture-ல் வேலை செய்வது, stretching பழக்கம், தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவை tendons-ஐ ஆரோக்கியமாக வைத்திருக்கும். சிறிய வலி தோன்றினாலும் உடனே ஓய்வு எடுப்பது பெரிய பிரச்சனையைத் தவிர்க்கும்.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கை
“இது சாதாரண வலி தான்” என்று அலட்சியம் செய்யக்கூடாது. வலி இருந்தும் தொடர்ந்து வேலை செய்தால் tendon முழுமையாக கிழியும் அபாயம் உள்ளது. அப்போது அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். எனவே உடல் கொடுக்கும் எச்சரிக்கையை கேட்டு உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
English Summary
Is your workload heavy This not just ordinary pain It risk Tendinitis which lead tendon rupture