கொலை முயற்சி வழக்கு... குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!
Murder attempt case Court sentences the criminal to 7 years in prison
திருநெல்வேலியில் முன்விரோதம் காரணமாக பெண் ஒருவரை தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, தோப்பூரை சேர்ந்த ஜெயசீலன் கடந்த 2022-ம் ஆண்டு, முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு, நாங்குநேரி சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராமதாஸ் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது அதில் குற்றவாளி ஜெயசீலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , சாட்சியங்களை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. போலீஸ் இன்ஸ்பெக்டர் , களக்காடு காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் இதுவரை 11 கொலை முயற்சி வழக்குகளில், சம்பந்தப்பட்ட 15 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.. அதில் 1 குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Murder attempt case Court sentences the criminal to 7 years in prison