சென்னை மக்களே மிஸ் பண்ணாதீங்க..நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! - Seithipunal
Seithipunal


பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது என்று .சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அரசுத் துறைகளின் சேவைகளை,  இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் ஜூலை 15ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்த திட்ட முகாம், எந்தெந்த பகுதிகளில் என்று நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்ள வசதியாக https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒவ்வொரு நாளும், அந்தந்த தேதிகளில் நடைபெறும் முகாம்கள் இதில் இடம்பெற்றுள்ளது.


இந்த முகாமில்,நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீா்வு அளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (25.09.2025) திருவொற்றியூர் , வார்டு-10ல் பூந்தோட்ட தெருவில் உள்ள பூந்தோட்ட விளையாட்டுத் திடல், தண்டையார்பேட்டை , வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் உள்ள எஸ்.கே.என்.எஸ்.பி.எம்.சி. விவேகானந்தா வித்யாலயா இளநிலை கல்லூரி, இராயபுரம் , வார்டு-58ல் பெரியமேடு, நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள பழைய சமுதாயக் கூடம், திரு.வி.க. நகர் ,

வார்டு-70ல் பெரம்பூர், ராஜா தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், அம்பத்தூர் , வார்டு-83ல் கொரட்டூர், அக்ரஹாரம், அன்னை நகர் சாலையில் உள்ள மோகன் கார்டன், அண்ணாநகர் , வார்டு-108ல் சேத்துபட்டு, டாக்டர் குருசாமி சாலையில் உள்ள அண்ணா அரங்கம், தேனாம்பேட்டை , வார்டு-118ல் அண்ணா சாலையில் உள்ள டி.யூ.சி.எஸ். காமதேனு திருமண மண்டபம், கோடம்பாக்கம்  வார்டு-140ல் மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் எத்திராஜ் நகர், கோடம்பாக்கம் சாலையில் உள்ள வி.கே.எம். மஹால், வளசரவாக்கம் மண்டலம்,

வார்டு-148ல் நெற்குன்றம், என்.டி. பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம். மஹால், ஆலந்தூர் , வார்டு-162ல் தில்லைகங்கா நகர், 45வது தெரு, உள்வட்ட சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபம், அடையாறு , வார்டு-175ல் ஆதம்பாக்கம், லட்சுமி ஹயக்ரீவர் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள விளையாட்டுத்திடல், பெருங்குடி , வார்டு-187ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai people dont miss it Tomorrow there is a Stalin scheme camp with you


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->