உடல்நிலை குறைவால் ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் காலமாகியுள்ளார்..! - Seithipunal
Seithipunal


உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழக அரசின் எரிசக்தி துறை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் 56 வயதில் காலமானார்.

பீலா வெங்கடேசன் கோவிட் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியுள்ளதோடு, பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 02 மாதங்களாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்துள்ளார்.

வெங்டேசன் - ராணி தம்பதிகளுக்கு களாக 1969-ஆம் ஆண்டு பிறந்தவர் பீலா. இவரது தந்தை வெங்கடேசன், போலீஸ் டி.ஜி.பி.,யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அம்மா ராணி வெங்கடேசன், பாரம்பரிய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டசபைத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., தேர்வானவர்.

சென்னையில் படித்து வளர்ந்த அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்துள்ளார். 1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராஜேஷ்தாஸை காதலித்து 1992-இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின், ராஜேஷ் தாஸ் தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பின்னர், 1997-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஆனார். முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர் ஒதுக்கப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரியான கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை மேற்கோள்காட்டி, 2000-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டார். பின்னர், 2003-ஆம் ஆண்டு பீகாரிலிருந்து பிரிந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின் மத்திய அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளிலும் பணியாற்றியுள்ளார். நீண்ட போராட்டத்துக்குப் பின், மீண்டும் தமிழகம் கேடர், இவருக்குக் கிடைத்தது.

பின்னர், தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியர் , நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், சுகாதாரத்துறை செயலாளராக, 2019 பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். 2020-இல் வணிக வரித்துறைக்கு மாற்றப்பட்டார். இதன் பிறகு, தற்போது கடைசியாக எரிசக்திதுறை முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு பீலா ராஜேஷ் என அவர் அழைக்கப்பட்ட இவர். இவரது கணவர் முன்னாள் டிஜிபியான ராஜேஷ்தாஸ் பாலியல் புகாரில் 03 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். இதனால் அவரது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டார். அதற்கு முன்னர் கணவரை விவாகரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IAS officer Beela Rajesh passes away due to ill health


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->