'நாடு முழுவதும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது': பாட்னா பொதுக்கூட்டத்தில் ராகுல் பேச்சு..!
Rahul Gandhi says peoples rights are being taken away across the country
85 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு பொதுக்கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதன் போது ராகுல் காந்தி, 'நாடு முழுவதும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது,'என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியுள்ளார்.
தொடர்ந்து அந்த பொது கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: வாக்காளர் உரிமை யாத்திரையின் போது பீஹாரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றோம். அப்போது, அரசியலமைப்பு தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து விளக்கினோம் என்று பேசியுள்ளார்.
அத்துடன், பீஹாரில் மட்டும் அல்லாமல், நாடு முழுவதும் குடிமக்களின் உரிமை பறிக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி முன்னர் இரண்டு விஷயங்களை கூறியதாகவும், ஒன்று, நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது; மற்றொன்று இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத வரம்பை அகற்றுவது என்று கூறியுள்ளதாவது அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றும் நமது நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர், தேவையான அளவில் பங்கேற்பு இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உண்மையை அனைவரும் அறிவார்கள் என்றும், நாட்டில் அவர்களின் உண்மையான மக்கள் தொகை கணக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அறிந்து கொள்ள விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் மொத்த எண்ணிக்கை குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது தான் எங்களது கொள்கை. மறுபுறம் உத்தர பிரதேசத்தில் ஜாதி ரீதியில் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சிந்தனை அப்படி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எங்களின் சிந்தனை வேறு. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தொலைநோக்கு பார்வையை வழங்க விரும்புகிறோம் என்று அவர் பேசியுள்ளார்.
English Summary
Rahul Gandhi says peoples rights are being taken away across the country