இரண்டு நடிகைகளை திருமணம் செய்த டாப் 5 நடிகர்கள் லிஸ்ட் இதோ!
Here is the list of top 5 actors who married two actresses
சினிமா உலகில் காதல், திருமணம், பிரிவு – இவை சகஜமான விஷயமாக மாறி விட்டன. அதிலும், ஒருவரல்ல இரண்டு நடிகைகளை திருமணம் செய்து கொண்ட சில பிரபலங்கள் குறித்து ரசிகர்கள் எப்போதும் ஆர்வமாக பேசிக் கொண்டே இருப்பார்கள்.
முதலில் தமிழ்த் திரையுலகின் உச்சநிலையிலிருக்கும் கமல்ஹாசனைப் பார்க்கலாம். இவர் முதலில் 1978-ஆம் ஆண்டு நடிகை வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து செய்தனர். பின்னர் நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். ஆனால் இந்த உறவும் 2004-ல் முறிந்து போனது.
அடுத்து, தெலுங்கு திரையுலகின் இளம் ஹீரோ நாக சைதன்யா. இவர் 2017-ல் நடிகை சமந்தாவை மணந்தார். ஆனால் 4 ஆண்டுகளிலேயே இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் திலீப், 1998-ல் நடிகை மஞ்சு வாரியரை மணந்தார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகளும் உள்ளார். ஆனால் 2015-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதற்கு அடுத்த ஆண்டே நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட்டில் பிரபலமான சைஃப் அலிகான், 1991-ல் நடிகை அம்ரிதா சிங்கை மணந்தார். இவர்களுக்குச் சாரா அலிகான் என்ற மகளும் உள்ளார். ஆனால் 2004-ல் இருவரும் பிரிந்தனர். பின்னர் 2012-ல் கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார் சைஃப். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவரும் பிரகாஷ் ராஜும் இரண்டு திருமணங்கள் செய்துள்ளார். 1994-ல் நடிகை லலிதா குமாரியை மணந்த இவர், 2009-ல் விவாகரத்து செய்தார். பின்னர் 2010-ல் நடன இயக்குனர் பொனி வர்மாவை மணந்தார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகனும் உள்ளார்.
இப்படி, ஒரே வாழ்க்கையில் இரண்டு நடிகைகளை மணந்த சினிமா நட்சத்திரங்கள் பலர். காதல், பிரிவு, புதிய வாழ்க்கை – எல்லாமே ரசிகர்களின் ஆர்வத்தையும், பேசுபொருளையும் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
English Summary
Here is the list of top 5 actors who married two actresses