'கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்'; மு.க.ஸ்டாலின் விமர்சனம்...! - Seithipunal
Seithipunal


மதுரையில் இன்று திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அங்கு பேசுகையில் கூறியதாவது:-

அடுத்த 02 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது என்றும்,  உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை..? என பிரதமர் மோடியிடம் கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு,  மார்ச் 01-ஆம் தேதி வருகை தரவுள்ள பிரதமரிடம், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரெயில் திட்டம் தரவில்லை? என மக்கள் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை என்றும், கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ் என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin criticizes EPS as a traitor who lacks the courage to even make a demand


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->