'காவி மயமாகி வரும் அதிமுக வெற்றி பெற்றால் RSS தான் நாட்டை ஆளும்'; திருமாவளவன் குற்றச்சாட்டு..!
Thirumavalavan alleges that RSS will rule the country if the saffron leaning AIADMK wins
சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டுளனர்.
அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்' என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அடுத்து,' பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது.' என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது; "அதிமுக காவி மயமாகி வருகிறது, பாஜக பிடியில் சென்றுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் செயல் இது. அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan alleges that RSS will rule the country if the saffron leaning AIADMK wins