ஜப்தி நோட்டீஸ்..நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு சிக்கல்..நடந்தது என்ன?
Seizure notice Actor Ravi Mohans house is in trouble What happened?
கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை செலுத்தாததால், தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் 3 அதிகாரிகள் ரவி மோகனின் வீட்டில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றனர்.
'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமானஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன், பொன்னியின் செல்வன்போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு முதலில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார்.அதன் பின் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தான் தயாரிப்பாளராக களமிறங்கி இருப்பதாக அறிவித்தார்.
இந்தநிலையில், நடிகர் ரவி மோகன் மீது டச் கோல்ட் யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தது. அதில், 2 படங்களில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தம் செய்ததாகவும், முன்பணமாக 6 கோடி ரூபாய் வழங்கியதாகவும், ஆனால் படத்தில் நடிக்காமல் வேறு நிறுவனத்தின் படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.
எனவே, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரவி மோகனுக்குச் சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்ய கோரிக்கை விடுத்தது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பங்களா தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதும், அதற்கான தவணை தொகையை ரவி மோகன் சரியாக கட்டவில்லை என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை செலுத்தாததால், தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் 3 அதிகாரிகள் ரவி மோகனின் வீட்டில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றனர். ரவிமோகன் தற்போது அந்த வீட்டுக்கு செல்வது இல்லை என்று கூறப்படுவதால், ரவி மோகனின் அலுவலகத்திலும் இந்த நோட்டீஸ் ஒட்ட உள்ளதாக கூறி அதிகாரிகள் சென்றனர்.
இதன்மூலம் ரவி மோகனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் வீட்டில் வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டி சென்ற சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Seizure notice Actor Ravi Mohans house is in trouble What happened?