தொடர் பேச்சுவார்த்தை..இந்தியா-அமெரிக்கா வர்த்த உறவில் அடுத்து என்ன? - Seithipunal
Seithipunal


 இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் தொடர்பாக  பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார்.அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.

இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அரசுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியுஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.

அங்கு அமெரிக்க அரசின் வர்த்தக துறை மந்திரியுடன் பியுஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Continued dialogue Whats next in IndiaUS trade relations?


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->