உலக சாதனை படைத்த விஜய் டிவி புகழின் மகள் ரிதன்யா – 1 மாதத்தில் இவ்வளவு திறமையா? ஆச்சரியத்தில் ஃபேன்ஸ்!
Rithanya daughter of Vijay TV pugazh who set a world record so much talent in 1 month Fans are surprised
விஜய் டிவி நட்சத்திரமாக பிரபலமான நடிகர் புகழின் மகள் ரிதன்யா, பிறந்த முதல் ஆண்டிலேயே உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். நடிகர் புகழ் ‘கலக்கப்போவது யாரு’, ‘அது இது எது’, ‘குக் வித் கோமாளி’ என பல நிகழ்ச்சிகளில் கலக்கி சிறந்த நகைச்சுவை நடிகராக வளர்ந்தது அனைவருக்கும் தெரிந்ததே. குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை அனைத்து வீடுகளிலும் செல்லப்பிள்ளையாக மாற்றியது.
பின்னர் சினிமாவிலும் தனது கால் பதித்த புகழ், சிக்ஸர், கைதி, வலிமை, யானை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் Mr. Zoo Keeper படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பாராட்டைப் பெற்றார்.
2022ஆம் ஆண்டு தனது காதலி பென்ஸி ரியாவை புகழ் திருமணம் செய்து கொண்டார். 2023ல் பிறந்த அவர்களின் மகளுக்கு ரிதன்யா என்று பெயரிட்டனர். பிறந்த சில மாதங்களிலேயே 2 கிலோ டம்பிளை 11 விநாடிகள் தூக்கி உலக சாதனை செய்த ரிதன்யா, தற்போது மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
இம்முறை, பிறந்த 11 மாதம் 14 நாட்களிலேயே இடைவிடாமல் 45 படிகளை ஏறிய சிறுமி என்ற சாதனையுடன் International Book of Records பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
சின்ன குழந்தை என்றாலும், உறுதி, நம்பிக்கை, முயற்சி ஆகியவற்றின் கலவையாக வளர்ந்து வரும் ரிதன்யாவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தந்தையை விட பெரிய ஸ்டார் ஆகப் போகிறாள்!”“இவ்வளவு குட்டியாக இருந்தும் இப்படிப் பண்ணுவாளா? சூப்பர்!”என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெருமையுடன் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Rithanya daughter of Vijay TV pugazh who set a world record so much talent in 1 month Fans are surprised