பும்ராதான் உலகிலேயே எதிர்கொள்வதற்கு மிகக் கடினமான பவுலர் – அங்க மட்டும் வந்துரக்கூடாது.. பஃப் டு பிளேஸிஸ் பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வேகப்பந்து சூப்பர் ஸ்டார் ஜஸ்ப்ரித் பும்ரா குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் பஃப் டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார் கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையில் நடைபெற்ற எஸ்ஏ20 இந்தியா நிகழ்ச்சியில் அவர், “பும்ரா உலகிலேயே எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான பவுலர்” என்று நேரடியாக தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா, தனது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன், மரண ஓவர்களில் கொடூரமான யார்க்கர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசுர ஆட்டம் என இந்தியாவின் முக்கிய ஆயுதமாக திகழ்ந்து வருகிறார். 2024 T20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றதோடு, தற்போது ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் உலகின் நம்பர் 1 பவுலராகவும் உள்ளார்.

2018ல் டெஸ்டில் அறிமுகமான பும்ரா, "இந்த ஆக்சனில் டெஸ்டில் சாதிக்க முடியாது" என்ற விமர்சனங்களை உடைத்து, இன்று 20க்கு குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலராக சாதனை படைத்துள்ளார். Border–Gavaskar தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தார்.

இந்த திறமையைப் பற்றி பேசிய டு பிளேஸிஸ், “அவரை எஸ்ஏ20 தொடரில் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன். ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் கூட பும்ராவை எதிர்கொள்வது மிகக் கடினம்” என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார்.

பும்ரா வரவிருக்கும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளதால், அந்த தொடர் மேலும் சுவாரஸ்யமாகி உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bumrah is the toughest bowler in the world to face donot just come here Buff du Plessis interview


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->