வெளியானது கிஸ் படத்தின் ஸ்னிக் பீக் வீடியோ.!!
kis movie snik peek vedio released
பிக் பாஸ் மூலம் பிரபலமான கவின் தமிழ் சினிமாவில் 'நட்புன்னா என்னானு தெரியுமா', 'லிப்ட்', 'டாடா' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது இவரது நடிப்பில் கடந்த 19ந் தேதி "கிஸ்" என்ற படம் வெளியானது.
அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி என்பவர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி என பலரும் நடித்திருந்தனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் ரூ. 2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்கள் வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கிஸ் படத்தின் ஸ்னிக் பீக் வீடியோவை நடிகர் கவின் வெளியிட்டுள்ளார்.
English Summary
kis movie snik peek vedio released