தாம்பத்தியத்தில் ஈடுபடாததால் 2 கோடி பணம் கேட்டு மிரட்டிய மனைவி - புதுமாப்பிள்ளை பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் வசித்து வந்த ஒரு தம்பதிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து அந்த தம்பதியினர் முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும், தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை.

இதையடுத்து அந்தப் பெண், தனது கணவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் கணவரின் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்ததனால் மருத்துவர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பெண்ணின் கணவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அதன் பின்பும் அந்த ஆண், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து அந்த ஆணை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- எனது மனைவி என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்பினார். அதுமட்டுமல்லாமல் தனது உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து என்னை தாக்கினார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை தனது மனைவிக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். என்னுடைய மனைவியும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார்.

ஆனால் நான் கால அவகாசம் கேட்டேன். அதன்பிறகு ஆகஸ்டு 17-ந்தேதி என்னுடைய மனைவியும், அவரது உறவினர்களும் என்னுடன் தகராறு செய்து என்னை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த எனது பொருட்களை வெளியே அள்ளிப்போட்டதுடன் என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

எனது தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என கூறினாலும், என்னுடைய மனைவி என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். அவரது குடும்பத்தினர், உறவினர்களும் என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man petition against wife for ask 2 crores money in karnataga


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->