விவாகரத்து செய்கிறாரா இளம் நடிகர்? இப்போதானே திருமணம் ஆச்சு? திரையுலகில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான சர்வானந்த் அவர்களைச் சுற்றி, ஒரு அதிரடி வதந்தி பறந்து கொண்டிருக்கிறது. அவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறப் போகிறார் என்கிற தகவல்தான் அது.

தமிழில் ‘காதல்னா சும்மா இல்ல’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான சர்வானந்த், பின்னர் ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘கணம்’ போன்ற படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து எதார்த்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் இவர்தான்.

2022-இல் தனது காதலி ரட்சிதாவுடன் நிச்சயதார்த்தம், 2023-இல் திருமணம், மேலும் தற்போது ஒரு அழகான பெண் குழந்தையின் தந்தையாகவும் இருக்கிறார் சர்வானந்த்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே, இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளிவந்தன. இப்போது அது நேரடியாக விவாகரத்து முடிவாகி விடுமா? என்ற கேள்வியாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இதே நேரத்தில், சர்வானந்தின் உறவினர்கள் இந்த தகவலை முழுமையாக மறுக்கிறார்கள். “அவர் தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால், மனைவி தனியாக வாழ்கிறார். ஆனால் இவர்களுக்கு இடையே பிரிவு எதுவும் இல்லை” என்கிறார்கள்.

ஆனால்… ரசிகர்கள் சற்று சந்தேகத்தில்தான் உள்ளனர். ஏனெனில், “நெருப்பில்லாமல் புகையாது” என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, பல பிரபலங்கள் ஆரம்பத்தில் மறுத்து, பிறகு நீதிமன்றத்தில் விவாகரத்து செய்த சம்பவங்களை நினைவூட்டுகிறார்கள். அதேபோல், சர்வானந்தின் விஷயத்திலும் உண்மை வெளிச்சம் பார்க்குமா? என்பது ரசிகர்களின் கேள்வியாக மாறியுள்ளது.

இதுவரை, இந்த வதந்திக்கு சர்வானந்த் வாய் திறக்கவில்லை. ஆனால், விரைவில் அவர் தரும் விளக்கம் தான்… உண்மைக்குப் புள்ளி வைக்கும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the young actor getting divorced He just got married There is a stir in the film industry


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->