₹399-க்கு ChatGPT Go பிளான் சூப்பர் ஹிட்!சாட்ஜிபிடி பயனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
ChatGPT Go plan for 399 is a super hit ChatGPT user count increases
இந்தியாவில் ₹399 விலையில் அறிமுகமான OpenAI-ன் ChatGPT Go திட்டம் பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 19 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம், ஒரே மாதத்துக்குள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது என்று ChatGPT நிறுவனர் நிக் டர்லி தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியை தொடர்ந்து, OpenAI இந்தோனேசியாவிலும் ChatGPT Go திட்டத்தை ₹399 (75,000 ரூபியா) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் ஒரே விலையுடன் கிடைப்பது, வளர்ந்து வரும் சந்தைகளில் ChatGPT-ஐ பரவலாக்க OpenAI எடுத்து வரும் முயற்சியைக் காட்டுகிறது.
₹399-க்குப் கிடைக்கும் இந்தத் திட்டம், இலவச பயனாளர்களை விட 10 மடங்கு அதிக செய்திகள், பட உருவாக்கங்கள் மற்றும் கோப்பு பதிவேற்றங்களை அனுமதிக்கிறது. மேலும், இது நீண்டகால உரையாடல்களை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டதால், தனிப்பட்ட பதில்களை வழங்கும் வசதியும் உள்ளது.
இந்தோனேசியாவில் ChatGPT Go அறிமுகமானது, Google AI Plus திட்டம் அறிமுகப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. Google AI Plus, Gemini 2.5 Pro, Veo 3 Fast வீடியோ உருவாக்கம் மற்றும் NotebookLM உள்ளிட்ட வசதிகளுடன், 200GB கூகுள் ஒன் சேமிப்பையும் வழங்குகிறது.
இந்தியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ChatGPT-யின் இரண்டாவது பெரிய பயனாளர் சந்தையாக உள்ளது. OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நிறுவனத்தின் முதல் அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளார். இது இந்திய சந்தை மீதான OpenAI-ன் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
English Summary
ChatGPT Go plan for 399 is a super hit ChatGPT user count increases