மத்திய அரசின் வெற்றி: சத்தீஸ்கரில் 21 பெண் நக்சலைட்டுகள் உட்பட 71 பேர் ஆயுதங்களுடன் சரண்..! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். இதில், நக்சலைட்களை துல்லியமாக பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால், அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, இன்று சத்தீஸ்கரில் தண்டேவாடா மாவட்டத்தில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுக்கள் 71 பேர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர்.  இதில் ரூ.64 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 30 பேர் அடங்குகின்றனர். இவர்கள் தங்களது ஆயுதங்களை போலீசில் ஒப்படைத்துள்ளனர். 

இதில் ரூ.64 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 30 பேர் அடங்குவர். சரணடைந்தவர்களில் 17 வயது சிறுவனும், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் அடங்குவர். இதுவரையிலான சரண் அடை ந்தவர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இதுவும் ஒன்று என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, சரணடைந்த நக்சலைட்டுகள் அனைவருக்கும் தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கையின்படி இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை நக்சலைட்டுகள் 1,113 பேர் வன்முறையை கைவிட்டுள்ளனர். இவர்கள் தங்களது ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 297 பேருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

71 Naxalites including 21 female surrender with weapons in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->