முன்னாள் முதல்வர் கொலை வழக்கு: கொலையாளிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி..!
Supreme Court questions why the death sentence was not carried out for the murderer in the former Chief Ministers murder case
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கடந்த 1995-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பஞ்சாப் சண்டிகரில் உள்ள தலைமைச்செயலகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 16 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வந்த் சிங் ராஜோனா என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவனுக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கருணை மனு தாக்கல் செய்து இருந்தது.
கடந்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் , தூக்கு தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. அதன்பின்னர், கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த மனுவில், கருணை மனு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், தனது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அவனது மனுவில், 28.8 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதாகவும், அதில் 15 ஆண்டுகள் தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அஞ்சாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதன் போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதாடியதாவது கூறியதாவது:
மனுதாரரின் கருணை மனு மீது என்ன முடிவெடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றார். அதற்கு அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், இது குறித்து கருத்து பெற்று தெரிவிப்பதாக கூறினார்.

அத்துடன், ரோத்தஹி மேலும் குறிப்பிடுகையில், ஒருவருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை என்றும், கருணை மனு மீது உரிய காலத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. அத்துடன், ராஜோன்னா இந்திய குடியுரிமை பெற்றவர். இது ஒன்றும் இந்தியா பாகிஸ்தான் விவகாரம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நீதிபதிகளிடம், குற்றத்தின் தன்மை குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன் விளக்கமளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: இன்னும் குற்றவாளியை தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன் என்றும், இதற்கு யாரை குறை சொல்வது..? தண்டனைக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. குற்றவாளி கருணை மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சார்பில் குருத்வாரா குழு தான் மனு தாக்கல் செய்துள்ளது எனக்கூறி விசாரணையை அக்டோபர் 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Supreme Court questions why the death sentence was not carried out for the murderer in the former Chief Ministers murder case