சென்னையில் 3 இடங்களில் பறக்கும் படை அதிரடி...! - லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்துள்ளன.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.29 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த விசாரணையில், மயிலாப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கட்டுமானப் பணிக்காக அந்தப் பணத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் ரூ.1.16 லட்சம் மற்றும் எழும்பூர் தொகுதியில் ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தேர்தல் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flying Squad Conducts Raids 3 Locations Chennai Cash Worth Lakhs Seized


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->