தவறான முடிவுகளை எடுக்காதே..உன்னை காயப்படுத்தி கொள்ளாதே – ரவி மோகனுக்கு ஆறுதல் கூறிய நடிகை அம்பிகா - Seithipunal
Seithipunal


நடிகர் ரவி மோகன் சமீபத்தில் அளித்த உணர்ச்சிப்பூர்வமான பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகை அம்பிகா பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

கடந்த வாரம் வெளியான பேட்டியில், தனது விவாகரத்து விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் குறித்து ரவி மோகன் உருக்கமாக பேசியிருந்தார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள், குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதூறுகள் உள்ளிட்ட பல விஷயங்களை கண்ணீருடன் பகிர்ந்திருந்தார்.

அதில்,“என் மகன்களிடம் போனில் கூட பேச முடியவில்லை. அவர்கள் தரும் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தான் விவாகரத்து கேட்கிறேன். எனக்கு எதிராக சூனியம் செய்கிறார்கள். அதனால் ரத்த வாந்தி எடுத்து வருகிறேன்”
என்று அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும்,“45 வயதில் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி சென்றுவிட்டேன் என்று பேசுவது நியாயமா? நான் நடிகன். தினமும் அழகான நடிகைகளுடன் தான் வேலை செய்கிறேன். அப்படி என்றால் எப்போதோ வாழ்க்கை மாறியிருக்கும்”
என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

அதோடு, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவித்த “இட்லி நடிகை” ஒருவரையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், 80-களின் பிரபல நடிகையான அம்பிகா தனது எக்ஸ் (X) பக்கத்தில் ரவி மோகனுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“ரவி, நீ முதலில் பலவீனமாக உணராதே. எல்லாம் சரியாகிவிடும். கடவுள் உன்னைச் சோதிக்கிறார், கொஞ்சம் தாமதிக்கிறார் என்று நினைத்துக்கொள். தவறான முடிவுகளை எடுக்காதே. உன்னை நீயே காயப்படுத்திக்கொள்ளாதே. குழந்தைகள் மீது நீ வைத்திருக்கும் பாசமே, உனக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பை மீண்டும் தரும். கடவுளிடம் வேண்டிக்கொள். நன்றாக தூங்கு. அப்பா, அம்மாவுடன் இரு அல்லது உன்னை நன்கு புரிந்துகொள்ளும் நபர்களுடன் இரு”
என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது மனிதநேயமான அணுகுமுறையை பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donot make wrong decisions donot hurt yourself Actress Ambika consoles Ravi Mohan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->