“ராஜன் வகையறா” ஷூட்டிங் விரைவில் தொடங்கும்; ரெடியாகும் வெற்றிமாறன்! அமீர் சொன்ன குட் நியூஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது நடிகர் சிம்புவை வைத்து ‘அரசன்’ திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், நீண்டநாளாக பேசப்பட்டு வரும் ‘ராஜன் வகையறா’ திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘விடுதலை 2’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் தாமதமானதால் தற்போது சிம்புவை வைத்து ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

மதுரையிலிருந்து சென்னை வரும் ஒரு விளையாட்டு வீரர் எவ்வாறு ரவுடியாக மாறுகிறார் என்பதையே மையமாக வைத்து ‘அரசன்’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை மயிலை பகுதியை சேர்ந்த ‘டைகர் சிவா’ வாழ்க்கையை தழுவியே இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், ‘வடசென்னை’ உலகத்தை மையமாகக் கொண்ட மற்றொரு கதையான ‘ராஜன் வகையறா’ திரைப்படத்திற்கான பணிகளிலும் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ‘அரசன்’ படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளி நேரங்களில் ‘ராஜன் வகையறா’ கதையை முழுமைப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநரும் நடிகருமான அமீர், ‘ராஜன் வகையறா’ படம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,“நானும் வெற்றிமாறனும் இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றாகத்தான் காரில் வந்தோம். அப்போது அவர் சொன்னதை உங்களிடமே சொல்லிவிடுகிறேன். ‘ராஜன் வகையறா’ படத்தின் ஷூட்டிங்கை விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறோம் என்று வெற்றி கூறினார்” என்றார்.

அமீரின் இந்த தகவல் வெற்றிமாறன் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘வடசென்னை’ படத்தின் உலகத்தை விரிவுபடுத்தும் வகையில் ‘ராஜன் வகையறா’ உருவாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajan Vagiyaara shooting to begin soon Vetrimaaran is ready Good news from Aamir


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->