திகில் சூழும் “தாழ் திறவா” – கேன்ஸ் விழாவில் பாராட்டு பெற்ற டீசர்! திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு!
The terrifying Thazh Tiraava Teaser received praise at the Cannes Film Festival The terrifying first look posters are out
திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படம், அகழ்வாராய்ச்சி பின்னணியையும் அமானுஷ்ய அம்சங்களையும் இணைத்து வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளது.
பார்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த படத்தின் டீசர், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் மே 19ஆம் தேதி திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது. ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் கதை, ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம ஆபத்துகளை மையமாகக் கொண்டு நகர்கிறது. அகழ்வாராய்ச்சி பின்னணியில் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்கள் இணைக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. முதல் போஸ்டரில் இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயலும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதற்றத்துடன் ஓடி வரும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இரண்டாவது போஸ்டரில் பழமையான மாளிகை, ரகசிய கதவு மற்றும் அமானுஷ்ய சம்பவங்களால் பயந்து நிற்கும் குழந்தைகள் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பயமும் பதட்டமும் கலந்த அந்த தோற்றங்கள், படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை வழங்கப்போகிறது என்பதை உணர்த்துகின்றன.
“தாழ் திறவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
English Summary
The terrifying Thazh Tiraava Teaser received praise at the Cannes Film Festival The terrifying first look posters are out