தவெக அமைச்சரவையில் இணைந்த விசிக; அமைச்சராகும் வன்னி அரசு; திருமாவளவன் அறிவிப்பு..!
Vanni Arasu to Become Minister as VCK Joins DMK Cabinet
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இது குறித்து கூறியதாவது;
தவெக அமைச்சரவையில் பங்கேற்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக அழைப்பு விடுத்த நிலையில், அதன்பின்னர் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோரின் கருத்தின் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விசிக சார்பில் வெற்றிப்பெற்ற இரு சட்டப்பேரவை உறுப்பினர்களில் வன்னியரசுவின் பெயரை அமைச்சராக்க பரிந்துரைத்துள்ளதாகவும், இப்போது அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறுகிறோம் என்ற அறிவிப்பை மட்டும் நாங்கள் வெளியிடுகிறோம். திமுக கூட்டணி உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பின்னர் விரிவாக பேசுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து பேசிய திருமாவளவன், கடந்த மே 08-ஆம் தேதி நடந்த விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒரு சிலரை தவிர அனைவரும் தவெக அமைச்சரவையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் பொதுச் செயலாளர்களுடன் கலந்துப் பேசி தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக தெரிவித்ததாகவும், ஆனாலும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே, தவெக தரப்பில் அமைச்சரவையில் பங்கேற்குமாறு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தோம் என்றும், நாங்கள் 1999-இல் மூப்பனாரோடு தேர்தல் அரசியலில் நாங்கள் அடியெடுத்து வைத்தபோது 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என குரல் கொடுத்தோம். முதன்முறையாக கூட்டணி ஆட்சி குறித்து பேசியவர்கள் நாங்கள் தான். இப்போது தவெக கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்ததை கருத்தில் கொண்டு, கட்சியின் நீண்டகால கனவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
English Summary
Vanni Arasu to Become Minister as VCK Joins DMK Cabinet