திருப்பூர் பின்னலாடைத் தொழில் பாதிப்பு: நூல் விலை கிலோவுக்கு மீண்டும் ரூ.7 உயர்வு - அதிர்ச்சியில் உற்பத்தியாளர்கள்...! - Seithipunal
Seithipunal


ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் திருப்பூரில், பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

நூற்பாலைகள் மாதந்தோறும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில், மார்ச் இரண்டாவது பகுதிக்கான அறிவிப்பில் அனைத்து வகை நூல்களின் விலையும் கிலோவுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிப்ரவரி மாதத்தில் ரூ.7 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை கூடியிருப்பது உற்பத்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசப் போர்ச் சூழலால் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகள் உரிய இடங்களுக்குச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள சூழலில், இந்த நூல் விலை உயர்வு தொழிலை மேலும் பாதிக்கும் என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, நூல் விலையைச் சீராக வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruppur Knitwear Industry Hit Yarn Prices Rise by 7 per Kilogram Again Manufacturers Shock


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->