உடுப்பி ஸ்டைல் முட்டை புலாவ் செய்வது எப்படி?
uduppi style egg pulav
தேவையான பொருட்கள்:-
முந்திரிப் பருப்பு, பட்டை, லவங்கம், கிராம்பு, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எண்ணெய், முட்டை, வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி, பால், பாஸ்மதி அரிசி.
செய்முறை:-
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரிப்பருப்பு, பட்டை, லவங்கம், கிராம்பு, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதில் வேகவைத்த முட்டைகளை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கி நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி புதினா, கொத்தமல்லி சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் படி வதக்கவும்.
இதில், அரிசிக்கு தேவையான அளவு பால் ஊற்றி கொதிக்க விட்டு பாஸ்மதி அரிசியை சேர்த்து வேகவைத்து கடைசியாக வறுத்த முட்டைகளை சேர்த்து மெதுவாக கிளறினால் சுவையான உடுப்பி ஸ்டைல் முட்டை புலாவ் ரெடி.