சமந்தாவுக்கு விவாகரத்துக்கு பிறகும் குடைச்சல் கொடுக்கும் நாக சைதன்யா?தெலுங்கு நடிகை சொன்ன சீக்ரெட்? - Seithipunal
Seithipunal


கோலிவுட் – டோலிவுட் இரண்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சமந்தா.நாகார்ஜுனாவின் மகனும், டோலிவுட் ஹீரோவுமான நாக சைதன்யாவை காதலித்து, குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

விவாகரத்துக்கு பிறகு, நாக சைதன்யா சில வருடங்கள் சிங்கிளாக இருந்து, பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். அதே சமயம், சமந்தாவோ மையோசிடிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலம் சீராகிய பின், குஷி மற்றும் சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரு படங்களும் வசூலில் தோல்வியடைந்தன. பின்னர் சிறிய இடைவெளி எடுத்த அவர், சிட்டாடல் வெப் சீரிஸ் மூலம் திரும்பி வந்தார். அந்த சீரிஸ் அவருக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றுக் கொடுத்தது. இருப்பினும், தற்போது கைவசம் ஒரு வெப் சீரிஸ் மட்டுமே உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்நிலையில், பிரபல நடிகை லட்சுமி மஞ்சு அளித்த பேட்டி ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த பேட்டியில் அவர் –“ஒரு பிரபல நடிகரின் முன்னாள் மனைவி விவாகரத்து பெற்ற பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே கமிட்டான படங்களும் கைவிடப்பட்டன.

காரணம், அந்த நடிகர் என்ன நினைப்பார் என்பதுதான். ஆனால் அந்த நடிகையோ நடிக்கத் தயார். ஆண்களுக்கு இப்படி பிரச்சனை வராது, பெண்களுக்கு மட்டும் தான் இப்படித்தான். திருமணமானாலே குழந்தைகள், குடும்ப பொறுப்பு – எல்லாவற்றையும் சுமக்க வேண்டும்”

என்று கருத்து தெரிவித்தார். இதனை ரசிகர்கள் கேட்டதும், இது சமந்தாவையே குறிக்கிறாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், “நாக சைதன்யாவின் செல்வாக்குதான் சமந்தாவின் சினிமா வாய்ப்புகளை குறைத்துவிட்டதா?” எனும் சந்தேகமும் வலைதளங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

 சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொண்ட சமந்தா, மீண்டும் முன்னணி நிலையை பிடிப்பாரா? அல்லது இந்த குற்றச்சாட்டுகள் அவரின் கரியரை மேலும் பாதிக்குமா? என்பது ரசிகர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Naga Chaitanya keeps teasing Samantha even after divorce The secret told by the Telugu actress


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->