'உலகை உலுக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள்'; 'சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; சிறுமிகள் பலியிடுதல்; மாமிச விருந்து..? அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..? - Seithipunal
Seithipunal


உலக முழுவதும் தற்போது பேசும் பொருளாகியுள்ள ஒரே விஷயம் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தான். ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்ட கோப்பு தரவுகளில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் உலகின் செல்வாக்கு மிக்க ஆரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பெரியர்கள் , புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் மிக முக்கியமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பெரும் தொழிலதிபரும், நிதியாளருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019- ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கடத்தி அவர்களை பிரபல தொழிலதிபர்களுக்கு பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பு வரை ஜெஃப்ரி எப்ஸ்டீன் பெயர் அதிக அளவில் பொதுவெளியில் வராமல் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். 

இவருக்கு கரீபியன் பகுதியில் தனி தீவு, நியூயார்க், பாரிஸ், மெக்சிகோ இன்னும் பல நாடுகளில் விலை உயர்ந்த வீடுகள். அரசின் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்பு, அழகான இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் என ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய பிம்பம் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

கடந்த 2003-ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளர் விக்கி வார்டுக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றி ஒரு செய்தி எழுதுமாறு தனது ஆசிரியரிடம் இருந்து உத்தரவு வந்த நிலையில், இதற்காக அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அப்போதுதான் ஜெஃப்ரி எப்ஸ்டீன் வெறும் நிதியாளர், பணக்காரர் என்பதை கடந்து அவருடைய இன்னொரு கோர முகத்தையும் கண்டறிந்துள்ளார். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் 1996-ஆம் ஆண்டு மரியா ஃபார்மர் என்கிற பெண்ணும் அவருடைய 14 வயது தங்கையும் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதையும் அவர்கள் அதை காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளார்.

இந்த விபரம் குறித்து தனது கவர் ஸ்டோரியில் விக்கி வார்டு எழுத முயலும் போது ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவன ஆசிரியர் மூலம் அந்த பகுதியை நீக்கிவிட்டு எப்ஸ்டீன் குறித்த நல்ல தகவல்கள் மட்டுமே வெளி வருமாறு பார்த்துக் கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த எப்ஸ்டீன் 2019-ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சில காலங்களிலேயே தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும், இதுவரை காலமும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்கொலையில் பல மர்மங்கள் நீடிக்கிறது. திடீரென அவர் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன? அவர் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் அவரது அறையை சுற்றி இருந்த அனைத்து பாதுகாப்பு கேமராவும் செயலலிழந்து போனது எப்படி போன்ற பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

இதனை தொடர்ந்து, ஜெஃப்ரி எப்ஸ்டீன் மறைவு அவரது பின்புலம் குறித்த கேள்விகளையும் விவாதங்கள் அதிகரிக்க தொடங்கியது. இந்த விவகாரத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் பல்வேறு முக்கிய உலக தலைவர்கள் மற்றும் பணக்காரர்கள் வாடிக்கையாளராக இருந்ததாகவும் அவர்களின் பெயர்களை காப்பற்றவே அவரை கொலை செய்ததாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. 

அத்துடன், FBI-யிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணையில் வாடிக்கையாளர் குறித்த பட்டியல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலுக்கு அமெரிக்காவின் FBI மறுப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் அமெரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் யாருடன் மெயில் தொடர்பு கொண்டிருந்தார், அவருக்கு யாரிடம் இருந்து மெயில் வந்துள்ளது மற்றும் பல்வேறு புகைப்படம் மற்றும் வீடியோக்களும் அடங்கிக்கின்றன.

இந்த ஆதாரங்கள் தற்போது ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது. அதாவது, ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் மெயில் தொடர்பு மற்றும் புகைப்படங்களில் பல்வேறு உலக தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், விஞ்ஞானி ஸ்டீப்பன் ஹாக்கிங், தொழிலதிபர் பில் கேட்ஸ் போன்ற பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த பட்டியலில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் பெயரும் இருக்கிறது என்றும் அதை அமெரிக்க அரசாங்கம் மறுப்பதாகவும் ஒரு பதிவு செய்திட்டு, பின்னர் அதை டெலிட் செய்தது பெரும் பேசும் பொருளானது. இருப்பினும் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளில் இந்திய தொழிலதிபர் அம்பானி, பிரதமர் மோடி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் போன்றோரின் பெயர்களும் இமெயில்களில் இடம்பெற்று உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை இமெயில்களில் பெயர்கள் குறிப்பிட்ட அனைவரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று கூறிவிட முடியாது என்றும், அவர்களின் பெயர்களை மூன்றாம் நபர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர, அவர்கள் அனைவரும் நேரடி தொடர்பு என்பதற்கான ஆதாரங்கள் இல்லை அவர்களின் தரப்பினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட சில ஆவணங்களின் படி அங்கு சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதை தவிர மனித மாமிசம் கொண்ட விருந்து நடத்தப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், குழந்தைகள் பலியிட்டதாகவும் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்த வெளியாகும் தகவல்களை நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இணைந்து சிறுமிகளை மோசமாக கொடுமை படுத்தியது மற்றும் பாலியல் கொடுமைகள் செய்த விவகாரத்தில் எப்ஸ்டீன் காதலி Ghislaine Maxwell -க்கு 2022-ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தற்போது Ghislaine Maxwell டெக்சாஸ் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Epstein files contain shocking information ranging from the sexual abuse of minors to the serving of human flesh at feasts


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->