வரும் 07 ஆம் தேதி, இரண்டு நாள் பயணமாக மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி..!
Prime Minister Modi will be traveling to Malaysia on the 7th of this month for a two day visit
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, வருகிற சனிக்கிழமை (07 -ஆம் தேதி) மலேசியா செல்லவுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இந்த பயணத்தின் போது மலேசிய வாழ் இந்தியர்களுடன் உரையாடுவதோடு, தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
பிரதமரின் இந்த பயணத்தின் போது இந்தியா- மலேசியா சிஇஓ மன்றம் நிகழ்ச்சியும் அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வரலாற்று நாகரிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் மலேசியாவும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உலகின் 03-வது பெரிய நாடாக மலேசியாவில் 2.9 மில்லியன் பேர் கொண்ட இந்திய வம்சாவளியினர் இருப்பதும் இந்த உறவை மேலும் வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
English Summary
Prime Minister Modi will be traveling to Malaysia on the 7th of this month for a two day visit