அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்கும்: கோவில் விழாவில் மேயர் பேச்சு!
Drinking water will be available without shortage in all areas Mayors speech at the festival
அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடின்றி முறையாக கிடைக்கும் வகையில் பணியாற்றி வருகின்றோம் என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்.
தூத்துக்குடி மேல லசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவில் 6ம்நாள் நிகழ்ச்சியாக மதுரை தமிழரசி குழுவினாின் கிராமிய கும்மிபாட்டு நிகழ்ச்சியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்து கோவில் மகளிா் அணி சந்தா தாரா்களுக்கு பாிசு பொருட்கள் வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், இது போன்ற திருவிழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சண்முகபுரம் பகுதி தற்போது 3 வாா்டாக பிாிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு அமைக்கப்பட்டுள்ள பழைய குடிநீர் குழாய்களில் ஒரு குறைபாடு என்றால் அதை களைவதற்கு சற்று சிரமமாக இருந்தது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக பழைய பைப்புகள் அகற்றப்பட்டு புதிய கருப்பு பைப் லைன் கொடுக்கப்பட்டுள்ளது.
இனி எல்லோருக்கும் தண்ணீர் தட்டுபாடின்றி முறையாக கிடைக்கும் எதிர்கால தலைமுறையினா் நலன் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறோம் இதற்கு அனைவரும் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும். அந்த பணி முடிந்ததும் எல்லா பகுதிகளுக்கும் புதிய தாா்சாலை பேவா் பிளாக் சாலைகள் அமைப்பதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அந்த பணிகளை சிறப்பான முறையில் செய்து தருவேன் என்று தொிவித்துக்கொள்கிறேன் என்றார்.
விழாவில் கோவில் தலைவரும் தர்மகர்த்தாவுமான கோட்டுராஜா, பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், செயலாளர்கள செல்வராஜ், பொன்ராஜ், மாாி செல்வ ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், தாமஸ், குமாரவேல், கண்ணன், துணைச் செயலாளர்கள் முருகேசன், கனக மாரியப்பன், சதிஷ்குமாா், மனோராஜ், ராஜசேகா், பொருளாளர் பழனிக்குமாா், மேற்கு மண்டல மாநகராட்சி தலைவர் அன்னலட்சுமி, திமுக பகுதி செயலளார் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
English Summary
Drinking water will be available without shortage in all areas Mayors speech at the festival