வழிச்சாலையாகும் பரமக்குடி–இராமநாதபுரம் சாலை! பிரதமருக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்!
ADMK Edappadi Palaniswami thanks to PM Modi NH87
பரமக்குடி–இராமநாதபுரம் இடையிலான நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி இன்று காலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பரமக்குடி–இராமநாதபுரம் இடையிலான #NH87 நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
ரூ.1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
ADMK Edappadi Palaniswami thanks to PM Modi NH87