வட்டி இல்லாத கல்விக்கடன்..மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த முதல் மந்திரி நிதிஷ்குமார்!
The first minister Nitish Kumar has issued an invitation for interest free education loans to students
மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக்கடன் வழங்கப்படும் என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு வெளியிடுள்ளார்.மாணவர் கடன் அட்டை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் தலைமயிலான ஆட்சி நடைபெற்றவருகிறது.இந்த ஆட்சி காலம்விரைவில் முடிவடைகிறது.243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ‘‘மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு வாரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வியை தொடர உதவும் வகையில் வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ₹2 லட்சம் வரையிலான கடனை திருப்பி செலுத்தும் காலம் 60 மாதங்களில் இருந்து 84 மாதங்களாகவும், ₹2 லட்சத்துக்கு மேல் உள்ள கடனை செலுத்தும் காலம் 84 மாதங்களில் இருந்து 120 மாதங்களாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது’’ என கூறியுள்ளார்.
பீகாரில் மாணவர் கடன் அட்டை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . முன்னதாக ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 1 சதவீத வட்டி விகிதத்திலும் ₹4 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டன என்பது கூடுதல் தகவல் .
English Summary
The first minister Nitish Kumar has issued an invitation for interest free education loans to students