கேரளாவில் அதிர்ச்சி: சிறுவர்களை சித்ரவதை செய்த பாதிரியார் மீது போக்சோ வழக்கு...!
Shocking incident Kerala POCSO case filed against priest who tortured young boys
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகிலுள்ள கல்லேரிபாகம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான சம்பத், கிறிஸ்தவ பாதிரியாராக பணியாற்றி வந்தவர். வெளிநாட்டில் இருந்தபோது, கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் அறிமுகமான இவர், அவரது இரண்டு சிறுவர்களை கவனித்துக் கொள்வதாக கூறி நம்பிக்கை பெற்றுள்ளார்.

6 மற்றும் 12 வயதுடைய அண்ணன்–தம்பி சிறுவர்கள் தந்தை வெளிநாட்டில் இருந்த நிலையில், பாதிரியாரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆனால் அந்த நம்பிக்கையை துரோகம் செய்த சம்பத், தனது கட்டுப்பாட்டில் இருந்த சிறுவர்களை நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடூரம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.தொல்லை அதிகரித்ததால் மனஉளைச்சலில் இருந்த சிறுவர்கள், தங்களது தாயிடம் நடந்ததை பகிர்ந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய், வடகரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிறுவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு, அவர் பெங்களூருவில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று, டெல்லிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சம்பத்தை பெங்களூருவில் கைது செய்தனர்.
பின்னர் அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பத், கேரளாவைத் தாண்டி டெல்லி, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களிலும் பாதிரியாராக பணியாற்றியுள்ளார்.
அங்கு வேறு சிறுவர்களும் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு உள்ளாகியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking incident Kerala POCSO case filed against priest who tortured young boys