சேலத்தில் 17 புதிய பேருந்து சேவைகள்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு..!
Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurates 17 new bus services in Salem
சேலத்தில் 17 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தின் சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று இந்த அப்புதிய பேருந்துகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 12 புதிய தாழ்தளப் பேருந்துகள் மற்றும் 5 புதிய நகர BS-6 மகளிர் விடியல் பயணம் செய்யும் பேருந்துகளைக் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.
அத்துடன், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் 02 நகரப் பேருந்துகள் வழித்தட மாற்றம் செய்தும், 08 நகரப் பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு செய்தும், 1 நகரப் பேருந்து மூலம் கூடுதல் பேருந்து வசதியும் தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் வெ.குணசேகரன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) பா.கோபாலகிருஷ்ணன். பொது மேலாளர் (சேலம்) த.மோகன்குமார், முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) க.ராஜராஜன் மற்றும் தொமுச நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurates 17 new bus services in Salem