பிரதமர் மோடி பிறந்தநாள்: நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள்..!
Over one lakh health camps organised on the occasion of Prime Minister Modi birthday
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்தநாளான நாளை (செப்டம்பர் 17ஆம் தேதி) கொண்டாடவுள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நல திட்டங்களை திறந்து வைக்கவுள்ளார்.
அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் தாரில் ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியானை நாளை தொடங்கி, வரும் அக்டோபர் 02 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதாவது, "ஆரோக்கியமான பெண், வலுவான குடும்பம்" என்று கருப்பொருளில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் தொடங்கப்படவுள்ளது.
தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் பிரச்சர்கள் நடைபெறவுள்ளது. இதில் தொற்றா நோய்கள், இரத்த சோகை, காசநோய் மற்றும் அரிவாள் செல் நோய் ஆகியவற்றுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை இணைப்புகளை வலுப்படுத்தும்.

அதாவது, மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் நோய்த்தடுப்பு மூலம் தாய், குழந்தை மற்றும் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்து வகையிலும், இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்த இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த நிகழ்வின் போது, பிரதமர் மோடி இரண்டு சிறப்பு அரங்குகளைத் திறந்து வைக்கவுள்ளார். முதல் அரங்கில் பெண்கள் சுகாதாரம் மற்றும் அதிகாரமளித்தல் சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுமார் 15 அரங்குகள் இடம்பெறும். அடுத்த இரண்டாவது அரங்கில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொதுவான நீராவி கொதிகலன் போன்ற கண்காட்சிகளுடன் இந்தியாவின் ஜவுளித் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட PM மித்ரா பூங்கா முன்முயற்சியை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
English Summary
Over one lakh health camps organised on the occasion of Prime Minister Modi birthday