மிரட்டலா? அல்லது எச்சரிக்கையா?... எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா...? - விடையளித்த அதிபர் டிரம்ப் - Seithipunal
Seithipunal


உலக பணக்காரரான 'எலான் மஸ்க்' அவர்கள் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்துள்ள 'வரி மற்றும் செலவு' மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதனிடையே,  இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து புதிய கட்சியை தொடங்குவேன் என்று 'எலான் மஸ்க்' தெரிவித்தார்.

இதையடுத்து எச்சரிக்கையாக, 'எலான் மஸ்க் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டொனால்ட் டிரம்ப், "மஸ்க்கை நாடு கடத்த முடியுமா? எனத் தெரியாது.

அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும். எலான் மஸ்கின் நிறுவனங்கள் தொடர்பாக DOGE அமைப்பை விசாரிக்கச் சொல்லலாம். நிறைய சலுகைகளை அவர் அனுபவித்து வருகிறார்" என்று தெரிவித்தார்.

மேலும். அமெரிக்க அரசின் செலவினத்தை குறைக்க மஸ்க் தலைமையில் DOGE அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அந்த அமைப்பிலிருந்து மஸ்க் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Threat Or warning Will Elon Musk be deported President Trump responds


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->