விஜய், அஜித் இடத்தை யார் நிரப்புவார்கள்? பிரதீப் ரங்கநாதன் சொன்ன சூப்பர் பதில்!
pradeep ranganadhan say about vijai and ajith
விஜய் – அஜித் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கு ‘இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.
டியூட்’ படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் இடம், “விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேசிங் சென்றார். இப்பொழுது அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள்?” என்று கேட்ட போது, அவர் கூறியதாவது:
“விஜய் சார் மற்றும் அஜித் சார் இடைவெளியை யாரும் நிரப்ப முடியாது. அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக உழைத்து வந்த நிலையை அடைந்தவர்கள்.
ரஜினி, விஜய், அஜித் படங்களின் திரைக்கதைகள் எவ்வாறு இருந்தாலும், ரசிகர்கள் அதை வெற்றியாக்குவார்கள். அந்த நிலையை 30 ஆண்டுகளுக்குப் பிறகு யார் அடைவார்கள் என்பதும், அது மக்கள் மற்றும் ரசிகர்களின் கைகளில் மட்டுமே இருக்கும்.”
இந்த பதில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
pradeep ranganadhan say about vijai and ajith