மூன்றாம் வகுப்பு முதல் AI பாடத்திட்டம் - மத்திய அரசின் அறிவிப்பு! ஆனால், தமிழகத்தில்... பாஜக முன்வைத்த விமர்சனம்!
School education AI BJP central govt DMK
பாரதிய ஜனதா கட்சி.தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் 2026-27 கல்வியாண்டிலிருந்து மூன்றாம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் குறிப்பாக ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடமே கற்று கொடுக்காத சூழ்நிலையில், நம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி கற்பது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே?
ஏனெனில் வீண் ஐம்பத்திற்காக மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து மத்திய அரசின் நிதியை பயன்படுத்தாமல் அரசு பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிற அதே வேளையில், சென்னையில் உள்ள சன் ஷைன் பள்ளி உள்ளிட்ட மற்ற அனைத்து தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பாடம் சென்றடையும்.
தனியார் பள்ளிகளை வளர்க்க, அரசுப்பள்ளிகளை சீர்குலைக்க மாநில கொள்கை என்ற வரட்டு பிடிவாதத்தை திராவிட மாடல் என்று சொல்லி தங்களை வளர்த்துக்கொண்டு, ஏழை எளிய மக்களை நட்டாற்றில் விடும் செயலே இது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
School education AI BJP central govt DMK